சுடச்சுட

  

  திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

  By திருநெல்வேலி,  |   Published on : 23rd December 2013 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி நகரில் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

  திருநெல்வேலி மாநகர திமுக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் இரா. நமச்சிவாயம் என்ற கோபி தலைமை வகித்தார். என். வீரபெருமாள், எம். அய்யாபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் கட்சியின் மாநில மாணவரணி துணைச் செயலர் குத்தாலம் க. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன், முன்னாள் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், மாநகரச் செயலர் மு. அப்துல்வஹாப், தணிக்கைக்குழு உறுப்பினர் சுப. சீதாராமன், டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ. பிரபாகரன், கா. முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜார்ஜ்கோசல், மாவட்ட மாணவரணிச் செயலர் அருண்குமார், மாவட்ட விவசாய அணிச் செயலர் போர்வெல்கணேசன் உள்பட பலர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai