சுடச்சுட

    

    நெல்லை -அம்பை பிரதான சாலையை அகலப்படுத்த முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

    By திருநெல்வேலி,  |   Published on : 23rd December 2013 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    மேலப்பாளையம் நகர செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.ஏ. நாகூர்கனி தலைமையில் நடைபெற்றது. எம்.ஏ.எஸ். செய்யதுமுகம்மது முன்னிலை வகித்தார்.

    துணைத் தலைவர் ஜெ. சாகுல்ஹமீது, நகரப் பொருளாளர் பி.எம். அப்துல்ஜப்பார், எம்.ஜி. காஜாமைதீன், வி.எம்.எஸ். அன்வர், சுகைப்லெப்பை, நகர துணைச் செயலர் மில்லத்காஜாமைதீன், எல்.கே.எஸ். செய்யதுமுகம்மது, அப்துல்ரகுமான், பஷீர்அகமது உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், டிச. 28-ம் தேதி திருச்சியில் நடைபெறும் இளம்பிறை இளைஞர்கள் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது. ஓரினச் சேர்க்கை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் மத்திய அரசு சட்டம் கொண்டு வர முயற்சிப்பது ஏற்புடையதல்ல. பொதுமக்கள் நலன் கருதி மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும்.

    திருநெல்வேலி மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

    சாலை குறுகலாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. ஆகவே இந்த சாலையை இரு வழிப்பாதையாக அகலப்படுத்த வேண்டும். மேலப்பாளையத்தில் இயங்கி வரும் உழவர்சந்தையை விளையாட்டு திடலாக மாற்றும் திட்டத்தை மாநகராட்சி கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai