Enable Javscript for better performance
பஸ்ஸில் பயணிகளிடம் திருடிய இரு பெண்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    பஸ்ஸில் பயணிகளிடம் திருடிய இரு பெண்கள் கைது

    By திருநெல்வேலி,  |   Published on : 23rd December 2013 02:24 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலியில் பஸ்ஸில் பயணிகளிடம் செல் போன், மணி பர்ஸ் திருடிய இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

    பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வண்ணார்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செல்லப்பாண்டியன் சிலை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களிடம் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த வள்ளி(45), லெட்சுமி(55) என்றும், இவர்கள் இருவரும் திருநெல்வேலி சந்திப்பு பேருந்துநிலையத்திலிருந்து,புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்ற பஸ்ஸில் பயணிகளிடம் செல் போன் மற்றும் மணி பர்ஸ்களை திருடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் இரு பெண்களையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai