சுடச்சுட

    

    பாளையங்கோட்டை லட்சுமிராமன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

    By திருநெல்வேலி,  |   Published on : 23rd December 2013 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டை ஐ.ஐ.பி.இ. லட்சுமிராமன் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளித் தாளாளர் எஸ்.ஆர். அனந்தராமன் தலைமை வகித்தார். முதல்வர் பி. செல்லத்துரை, கல்வி இயக்குநர் பா. சொக்கலிங்கம், துணை முதல்வர் க. சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டுப்புறவியல் பேராசிரியர் சகாயராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிறிஸ்துமஸ் குறித்துப் பேசினார். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரமணா வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய இயேசு பிறப்பு நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பயனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியர்கள் ஏ. கோமதி, ஆர். சாந்தி, ஆசிரியர்கள் ஏ. மணிவண்ணன், ஏ. முத்துமகராஜா, ஏ. சுரேஷ், எம். சின்னத்துரை, செ.பா. தவசிக்கனி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ஏ. சேவியர் வரவேற்றார். ஆசிரியை லெட்சுமி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai