சுடச்சுட

    

    பாளை.யில் பள்ளிக் குழந்தைகளின் கிறிஸ்துமஸ் ஊர்வலம்

    By திருநெல்வேலி  |   Published on : 23rd December 2013 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டையில் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளிக் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் தேவதைகள் போல வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர், மாணவிகளின் இசைக் குழு பாடல்களை இசைத்தபடி முன்னே செல்லவும், அதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த குழந்தைகளும், தேவதைகள் உடையணிந்த குழந்தைகளும் அணி வகுத்துச் சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் எம்.சி. ராஜன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் வித்யா முத்துக்குமார் முன்னிலை வகித்தார். பாளையங்கோட்டையில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பள்ளிக் குழந்தைகள், பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில், இயேசு பிறப்பு மற்றும் அவரது வாழ்க்கைக் குறிப்பு தொடர்பான நாடகம் அரங்கேற்றப்பட்டது. அருள்தந்தை டேனிஸ் பொன்னையா கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் நற்செய்திகளை வழங்கினார். மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    பள்ளி மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர், மாணவிகள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai