Enable Javscript for better performance
பாளை. அருகேவிபத்து: காவலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாளை. அருகேவிபத்து: காவலாளி சாவு

    By திருநெல்வேலி  |   Published on : 23rd December 2013 02:28 AM  |   அ+அ அ-   |    |  

    பாளையங்கோட்டை அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த காவலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

    பாளையங்கோட்டை அருகே உள்ள திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி (53). வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்த இவர், தனது மோட்டார் சைக்கிளில் சீவலப்பேரி சாலையில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ் வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கணபதியை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai