சுடச்சுட

  

  புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

  By திருநெல்வேலி,  |   Published on : 23rd December 2013 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச் சங்க திருநெல்வேலி மாவட்டக் கிளையின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ஓய்வூதியம் என்பது சொத்துரிமை போன்றது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தினமான டிச. 17 ஆம் தேதி ஓய்வூதியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

  பாளையங்கோட்டை தியாகராஜநகரில் நடைபெற்ற அமைப்பின் சிறப்புப் பேரவைக் கூட்டத்துக்கு அதன் தலைவர் அகஸ்டின் தலைமை வகித்தார்.

  கூட்டத்தை அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர்கள் முத்துக்குமாரசாமி தொடங்கி வைத்துப் பேசினார். மாநில துணைப் பொதுச்செயலர் சின்னச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் பஞ்சரத்னம், மாவட்டச் செயலர் சண்முகசுந்தரம், பொருளாளர் சாமுவேல்ஐசக் உள்பட பலர் பேசினர்.

  கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் குறித்த நீதிமன்ற தீர்ப்புகளையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

  குடும்ப நல நிதியை ரூ. 1.50 லட்சம் ஆக உயர்த்த வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வழங்குவதைபோல், கருணை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அதே நாளில் வழங்க வேண்டும்.

  குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அரசாணை எண் 363-ஐ மின்வாரிய ஓய்வூதியர்களுக்கும் பயன் கிடைக்கும் வகையில் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரியத்தை பிரிக்கும் திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  அமைப்பின் செயலர் காந்தி வரவேற்றார். மாவட்ட இணைச் செயலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai