சுடச்சுட

    

    மத்திய கூட்டுறவு வங்கி ரூ. 469 கோடி கடனுதவி

    By திருநெல்வேலி,  |   Published on : 23rd December 2013 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி தனது கிளைகள் முலம் ரூ. 469 கோடிக்கு உழவர்கடன், விவசாய நகைக்கடன் உள்ளிட்டவை வழங்கியுள்ளதாக கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சு. முருகபூபதி தெரிவித்தார்.

    நிர்வாகக்குழுக் கூட்டம்: வங்கியின் 5-வது நிர்வாகக்குழுக்கூட்டம் அதன் தலைவர் ஆ. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கியின் மேலாண் இயக்குநர் இரா. தயாளன், திருநெல்வேலி மண்டல இணைப்பதிவாளர் க. கனகசுந்தரம், வேளாண்துறை இணை இயக்குநர் கி. சௌந்திரராஜன், துணைத் தலைவர் செ. ஏசுராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வங்கி முதன்மை வருவாய் அலுவலர் எஸ். சுப்பையா, பொதுமேலாளர் சி. பாஸ்கரன் உதவி பொதுமேலாளர் ஆர். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ரூ. 469 கோடிக்கு கடன்: கூட்டத்தில் கடன் வழங்குவது, கடன்களை வசூலித்தல், வைப்புத் தொகைகள் சேகரித்தல், ரிசர்வ வங்கி அறிவுரையின்படி வங்கியின் நிதிநிலை உயர்த்து குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு உழவர் கடன், நகைக்கடன், விவசாய நகைக்கடன், சுயஉதவிக்குழுக் கடன், மாற்றுத் திறனாளிக் கடன், வீட்டு வசதிக் கடன், கூட்டுப்பொறுப்புக்குழுக் கடன் உள்ளிட்ட கடன்களாக ரூ. 469 கோடி வழங்கியுள்ளது. வங்கியில் முதலீட்டு தொகையாக ரூ. 475 கோடியாக உள்ளது. வங்கி முடிந்த தணிக்கை ஆண்டில் ரூ. 4.95 கோடி லாபம் ஈட்டியுள்ளது என்றார் திருநெல்வேலி கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் சு. முருகபூபதி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai