Enable Javscript for better performance
மனித உரிமைகள் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    மனித உரிமைகள் தின விழா

    By திருநெல்வேலி,  |   Published on : 23rd December 2013 02:25 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி சட்ட உதவி மையம் சார்பில், அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா நடைபெற்றது.

    கல்லூரியின் செயலர் யதீஸ்வரி சரவண பவ பிரியா அம்பாள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எம்.மலர்விழி வரவேற்றார். சட்ட உதவி மைய நீதிபதி ஜெ.தமிழரசி பேசுகையில், ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். ஜாதி, மதமற்ற சமூகத்தை உருவாக்க மாணவர்கள் உதவ வேண்டும் என்றார். வழக்குரைஞர்கள் முத்துராம், தம்புராஜன், மாரியப்பகாந்தி, மதார்முகைதீன், தமீம் அன்சாரி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். பேராசிரியர் எஸ்.ரூபா உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவி பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai