சுடச்சுட

  

  அன்னை தெரசாவின் 12-ம் ஆண்டு நினைவையொட்டி, பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

  விழாவுக்கு, என்.தாவூது அஜிஸ் தலைமை வகித்தார். சேவியர் ராஜன் வரவேற்றார். தூய சவேரியார் கல்லூரி முதல்வர் கில்பர்ட் காமிலஸ், தூய அடைக்கல மாதா ஆலய பங்குத்தந்தை அந்தோனி குரூஸ், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஜெ.ஜெ.கிறிஸ்துதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம்-போக்குவரத்து) ஈ.டி.சாம்சன், நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

  விழாவில், ஆணையர்குளம் மாற்றுத்திறனாளிகள் மையத்துக்கு கணினி மற்றும் புத்தாடை, 2 பெண்களுக்கு தையல் இயந்திரம், ஆதரவற்ற 100 பெண்களுக்கு சேலை, அன்னாள் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் பிளாஸ்டிக் சேர் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் கிறிஸ்டோபர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை எம்.எஸ்.பி.தம்புராஜ், எஸ்.அருள்ஞானஸ்டீபன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai