Enable Javscript for better performance
அமிலம் வீசியதாக பெண் குற்றச்சாட்டு:போலீஸார் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    அமிலம் வீசியதாக பெண் குற்றச்சாட்டு:போலீஸார் மறுப்பு

    By திருநெல்வேலி,  |   Published on : 24th December 2013 04:13 AM  |   அ+அ அ-   |    |  

    தென்காசியில் அமிலம் வீசியதாகக் கூறி பெண் ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதனை போலீஸார் மறுத்தனர்.

    தென்காசி மேசியாநகரைச் சேர்ந்த நல்லக்கனி மனைவி கனகலட்சுமி (45). நெற்றியில் காயத்துடன் வந்த இவர், போலீஸார் தன் மீது அமிலம் வீசியதாகக் கூறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுகுறித்து கனகலட்சுமி கூறுகையில், எனது கணவர் மீது போட்ட வழக்கு பொய்வழக்கு எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த பெண் போலீஸார், வழக்கை வாபஸ் வாங்கக் கூறியதோடு திரவம் (அமிலம்) போன்ற பொருளை ஊற்றியதால் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளேன். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கனகலட்சுமிக்கும், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகப் புகார் வந்தது. அதுகுறித்து விசாரிக்க போலீஸார் அங்கு சென்றனர். ஆனால், அமிலம் வீச்சு என்பதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai