Enable Javscript for better performance
கடையநல்லூர் அருகே வீட்டில்ரூ. 5 லட்சம் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கடையநல்லூர் அருகே வீட்டில்ரூ. 5 லட்சம் நகை, பணம் திருட்டு

    By கடையநல்லூர்  |   Published on : 24th December 2013 04:13 AM  |   அ+அ அ-   |    |  

    கடையநல்லூர் அருகே வீடு புகுந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர் அருகேயுள்ள திரிகூடபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் காசிநாச்சியார் (44). இவர் ஞாயிற்றுக்கிழமை பொட்டல்புதூர் பகுதியிலுள்ள கோயிலுக்குச் சென்றாராம்.

    பின்னர், திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்தாராம். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

    உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 140 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 2 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாம். 

    இது குறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai