Enable Javscript for better performance
கிரிக்கெட் வீரர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

    By திருநெல்வேலி  |   Published on : 24th December 2013 04:15 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி மாவட்ட யூனைட்டடு கிரிக்கெட் சங்கம் சார்பில், திருநெல்வேலி மாவட்ட வீரர்கள் தேர்வு நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இத் தேர்வு போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 70 வீரர்கள் கலந்துகொண்டனர். சீனியர் பிரிவில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கேரள மாநிலம், போண்டா நகரில் ஜனவரி 8 முதல் 10-ம் தேதி வரை  நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களை, சங்கத்தின் மாவட்டச் செயலர் வெ.பெரியதுரை, பொருளாளர் க.கண்ணன், பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஊ.சந்திரபால் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai