சுடச்சுட

  

  கிறிஸ்துமஸ் விழா: மாறுவேடத்தில் குழந்தைகள் அசத்தல்

  By திருநெல்வேலி,  |   Published on : 24th December 2013 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் பல்வேறு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் நடத்தப்பட்டன. இதில் கிறிஸ்துமஸ் தாத்தா, தேவதைகள் என பல்வேறு மாறுவேடங்களில் குழந்தைகள் தோன்றி அசத்தினர்.

  பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் பள்ளியில் உலகின் ஒளி என்ற தலைப்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. செல்வின் சிறப்புரையாற்றினார். மாணவர்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள்-பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

  மகாராஜநகர் ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவுக்கு, ஜயேந்திரன் வி.மணி தலைமை வகித்தார். இயேசுவின் பிறப்பு என்ற தலைப்பில் பேராசிரியர் காலிஸ்டர் பேசினார். பள்ளி முதல்வர் ஏ.ஜயந்தி ஜயேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  தியாகராஜநகர்: பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் பத்மினி சாமுவேல் பேசினார். மாணவர்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  பாளையங்கோட்டை எஸ்.டி.சி. கிளை மார்க்கெட் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் சுதர்சன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கல்யாணி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினர். அல்பிரட், அனி எம்.அன்னபாக்கியமணி, தேவராஜ், உதவி ஆசிரியர் விஜயகுமாரி, சி.எம்.எஸ். மேரி ஆர்டன் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பொன்ராஜ், அலெக்ஸான்டர் சோமு உள்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் ஐசக்செல்லத்துரை நன்றி கூறினார்.

  கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு: பாளையங்கோட்டை பெல் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் தனசிங், குணசிங், விஜயசிங், ராஜேந்திரசிங், சஞ்சய் குணசிங், பள்ளி முதல்வர் அந்தோனி சேவியர் ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாக்களைப் போல மாறுவேடம் அணிந்து அணிவகுத்தனர்.

  திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் ஜோஸ்பின் விமலா தலைமை வகித்தார். இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் வகையில் நிலைக்காட்சியினை மாணவர்கள் செய்து காண்பித்தனர். கிறிஸ்துமஸ் மரம் குறித்து சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்பட்டது.

  வருங்கால வைப்புநிதி அலுவலகம்: பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. மண்டல ஆணையாளர் செüரப் ஸ்வாமி தலைமை வகித்தார். ஜெ.ஸ்டீவ்ஜெயராஜ் பேசினார். உதவி ஆணையர்கள் ஷேக்சிந்தா, மோகனன், மேத்யூ ஆபிரகாம் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோவிந்தராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுதா ஆரோக்கியமேரி, இந்திரா, ஜீவிஹரிணி, ராஜா பிரபுதாஸ், முத்துமீனாட்சி, சுமதி, நிர்மலா, ஜானகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai