சுடச்சுட

  

  சிறப்புக் காவலர் இளைஞர் படை: 30-ல் உடற்தகுதித் தேர்வு

  By திருநெல்வேலி,  |   Published on : 24th December 2013 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாநகர தமிழ்நாடு சிறப்புக் காவலர் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வில் வென்றவர்களுக்கு, இம் மாதம் 30-ம் தேதி திருநெல்வேலியில் உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

  இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சாம்சன் (குற்றம்-போக்குவரத்து) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  திருநெல்வேலி மாநகர தமிழ்நாடு சிறப்புக் காவலர் இளைஞர் படைக்கான 110 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக நவம்பர் 10-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு  ஆகியவை இம் மாதம் 30-ம் தேதி காலை 6 மணி முதல் நடைபெறுகிறது. பாளையங்கோட்டை மாவட்ட நூலக மையம், மரிய கேன்டீன் பஸ் நிறுத்தம் அருகே உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

  இத் தேர்வுகளில் கலந்துகொள்ளக் கூடிய தகுதியான விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் மற்றும் காவல் துறை இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகியவற்றில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தகுதிபெற்றவர்களின் பதிவெண்கள் இம் மாநகர காவல் ஆணையரக அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.

  இந்த விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அவரவர் முகவரிக்கு அஞ்சலகம் மூலம் கடந்த 16-ம் தேதி முதல் அனுப்பப்பட்டுள்ளன. இம் மாதம் 26-ம் தேதி வரை அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் இம் மாதம் 27 முதல் 29-ம் தேதி மாலை 5 மணி வரை நேரில் வந்து அழைப்புக் கடிதத்தின் நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.

  மேலும் தபால் மூலமாகவோ, நேரடியாகவோ வந்து அழைப்புக் கடிதத்தினைப் பெறத் தவறிய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தனது பதிவெண் அடங்கிய பக்கத்தினை பதிவிறக்கம் செய்து தகுந்த அடையாளச் சான்றுடன், உடற்தகுதித் தேர்வு நடைபெறும் மையத்திலுள்ள தேர்வு மைய அதிகாரியை அனுகலாம்.

  தேர்வு மையத்தில் விண்ணப்பதாரர் இத் தேர்வுகளில் கலந்து கொள்வதற்குரிய குறியீட்டுதாள் இருந்தால் அதனை சரிபார்த்து தகுதியானவர் எனக் கண்டறியப்பட்டால், அவர் இத் தேர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai