சுடச்சுட

    

    தொழிலாளி இருவருக்கு கத்திக்குத்து: இளைஞர் கைது

    By தென்காசி,  |   Published on : 24th December 2013 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்காசி மேலகரத்தில் ஞாயிற்றுக்கிழமை இருவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

    மேலகரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ச. பாலகண்ணன் (27),  வே. சந்தனகுமார். இருவரும் கட்டடத் தொழிலாளிகள். அதே பகுதியைச் சேர்ந்த இ. அய்யப்பராஜா (23). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு அப் பகுதியில் தகராறு செய்தாராம்.  பாலகண்ணனும், சந்தனகுமாரும் அவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறினராம். அப்போது அய்யப்பராஜா, திடீரென இருவரையும் கத்தியால் குத்தினாராம். பலத்த காயமடைந்த இருவரும், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிந்து அய்யப்பராஜாவை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai