சுடச்சுட

  

  நான்குனேரி அருகே பட்டாசு தயாரித்தபோது விபத்து: ஒருவர் கருகிச் சாவு

  By வள்ளியூர்,  |   Published on : 24th December 2013 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நான்குனேரி அருகே திங்கள்கிழமை பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஓருவர் உடல் கருகி இறந்தார். பட்டாசு வைத்திருந்த வீடு சேதமடைந்தது.

  வள்ளியூரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பெருமாள் (40). இவர் திருமணம் மற்றும்  திருவிழா, பண்டிகைகளுக்கான பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

  வள்ளியூரில் பட்டாசு தயாரித்து வந்த இவருக்கு இங்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,  நான்குனேரி அருகே உள்ள காரியாண்டியில் சிதம்பரம் என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீட்டில் பட்டாசு தயாரித்து வந்தார். சிதம்பரமும் இவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

  சிதம்பரம் தன் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் குடும்பத்தோடு இட்டமொழிக்கு திங்கள்கிழமை சென்றார். பெருமாள் மட்டும் வீட்டில் இருந்து பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தாராம். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பெருமாள் உடல் கருகி அதே இடத்தில் இறந்தார்.  வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டமானது. அருகில் உள்ள வீடுகளும் சிறிது சேதமடைந்தன.

  விபத்து நடந்த பகுதியை நான்குனேரி டி.எஸ்.பி. சண்முகம், வட்டாட்சியர் கண்ணகி ஆகியோர் பார்வையிட்டனர். இங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயநாராயணம் காவல் உதவி-ஆய்வாளர் சுந்தரபெருமாள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai