சுடச்சுட

  

  போக்குவரத்து இடையூறாக திரிந்த 45 மாடுகள் பிடிப்பு

  By திருநெல்வேலி,  |   Published on : 24th December 2013 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பிரதான சாலைகளில் போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரிந்த 45 மாடுகள் திங்கள்கிழமை பிடித்து பவுண்டில் அடைக்கப்பட்டன.

  மாநகராட்சியில் திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் போன்ற போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் பெருமளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு அல்லாமல் விபத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளை உரிமையாளர்கள் பிடித்து அவரவர் வீடுகளில் கட்ட வேண்டும். இல்லையெனில் மாடுகளை பிடிப்பதோடு அபராதம் விதிக்கப்படும் என மாநராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. 

  இந்நிலையில் திங்கள்கிழமை திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டலங்களில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், முருகேசன், சண்முகசுந்தரம், பரமசிவன், ஆறுமுகம், இசக்கி உள்ளிட்ட சுகாதாரப்பிரிவு பணியாளர்கள் மாடுகளை பிடித்து பவுண்டில் அடைத்தனர்.

  திருநெல்வேலி நகரில் 10 மாடுகளும், மேலப்பாளையத்தில் 13 மாடுகளும், பாளையங்கோட்டை பகுதியில் 22 மாடுகளும் பிடித்து அடைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மாடுகளின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மாடுகளை பெற்றுச் செல்லலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai