சுடச்சுட

  

  மக்களின் குறைகளைக் களைய நேரடி ஆய்வு அவசியம்

  By திருநெல்வேலி  |   Published on : 24th December 2013 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களின் குறைகளைப் போக்க அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பேரவை மனுக்கள் குழுத் தலைவரும் அரசு தலைமை கொறடாவுமான ஆர். மனோகரன் வலியுறுத்தினார்.

  பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக் கூட்டம், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சாரல் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று மனோகரன் மேலும் பேசியதாவது:

  இம் மாவட்டத்தில் மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பாக 7.8.13-ல் நாளிதழ்களில் தெரிவிக்கப்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, அவை தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு பதில் அறிக்கை பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. கோரிக்கைகளின் இப்போதைய நிலை குறித்து துறை அலுவலர்கள் மனுதாரர் முன்னிலையில் பதில் தெரிவித்துள்ளனர்.

  ஏற்கெனவே இக் குழுவினர் வருகையின்போது நிறைவேற்றப்படாமல் உள்ள மனுக்கள் மீதும் ஆய்வு மேற்கொண்டு குறைகளைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான சாலை, நீர்ப்பாசனம், குடிநீர் வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

  ஆட்சியர் மு.கருணாகரன், பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்களும் எம்எல்ஏக்களுமான கே. பொன்னுசாமி (தாராபுரம்), த. ஹரிதாஸ் (திண்டிவனம்), வெ. பொன்னுபாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர்), ஆ. ராமசாமி (நிலக்கோட்டை), திருநெல்வேலி மேயர் விஜிலா சத்தியானந்த், பேரவைச் செயலர் அ.மு.பி. ஜமாலுதீன், செ. பாண்டியன், சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), ச. முத்துசெல்வி (சங்கரன்கோவில்), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), மாநகராட்சி ஆணையர் த. மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ.விஜயகுமார், மாநகர காவல் துணை ஆணையர் சாம்சன் (குற்றம்-போக்குவரத்து), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) துரைராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ருக்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  கட்டடப் பணிகள் ஆய்வு: முன்னதாக, ராமையன்பட்டியில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் ரூ. 9.95 லட்சத்தில் கட்டப்படும் கால்நடைப் பராமரிப்பு மருத்துவக் கல்லூரி நிர்வாகக் கட்டடம், கல்லூரியின் கட்டடப் பணிகளை பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai