சுடச்சுட

    

    மண்ணுளிப் பாம்பு தருவதாக ரூ.1 லட்சம் மோசடி: ஹோட்டல் தொழிலாளி புகார்

    By திருநெல்வேலி  |   Published on : 24th December 2013 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்ணுளிப் பாம்பு தருவதாகக் கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது ஓட்டல் தொழிலாளி திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு புகார் அளித்தார்.

    திருநெல்வேலி மாவட்டம்,  தென்காசி அருகேயுள்ள கீழப்புலியூரைச் சேர்ந்தவர் மூக்கையா. சென்னையில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.  ஊருக்கு வந்திருந்த இவர், கடந்த 20-ம் தேதி தேவர்குளத்துக்குச் சென்றாராம். அப்போது மூக்கையாவிடம் ரூ.80 ஆயிரம் இருப்பதை அறிந்த, தேவர்குளத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மண்ணுளிப் பாம்பு தருவதாகக் கூறினாராம்.  இதையடுத்து அவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து மூக்கையாவை திருநெல்வேலிக்கு பைக்கில் அழைத்து வந்தனராம். பின்பு ஒரு அறையில் அடைத்து வைத்து பணத்தைப் பறித்ததாகக் கூறப்படுகிறது. மூக்கையாவின்  உறவினர் ஒருவரை ரூ. 20 ஆயிரத்தைக் கொண்டு வரச்சொல்லி அதையும் இந்தக் கும்பல் பிடுங்கியதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் மூக்கையா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் ஆனந்தராஜ், தேவர்குளம் முகுந்தன், திருநெல்வேலி நகரம் பாஞ்சாலம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai