சுடச்சுட

  

  15 ஆயிரம் பறவைகள் வந்துசெல்லும் குளங்கள்!

  By திருநெல்வேலி,  |   Published on : 24th December 2013 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பின்போது சில குளங்களில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பறவைகளுக்கும் மேல் வந்து அமர்ந்து செல்வது தெரியவந்துள்ளது.

  திருநெல்வேலி வன மண்டலத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளன. இம் மாவட்டங்களுக்கு வந்து செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகளை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டு, முதல்கட்ட கணக்கெடுப்பு நவம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 2-ம் கட்ட கணக்கெடுப்பு கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள திருப்புடைமருதூர் மற்றும் வடக்கு விஜயநாராயணபுரம், கூந்தன்குளம், ராஜவல்லிபுரம், வாகைகுளம், பிரான்சேரி, நயினார்குளம், பருதிவைகுளம், சாரல்குளம் உள்பட 11 குளங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

  2-ம் கட்ட கணக்கெடுப்பின்போது சுமார் 40 வகையான பறவையினங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. சில குளங்களுக்கு நூற்றுக்கணக்கிலும், சில குளங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளும் வந்து செல்வது கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது. வாத்து இன பறவைகள், செங்கால்நாரை உள்ளிட்ட நீர்வாழ் பறவைகள், சதுப்புநிலங்களில் வசிக்கும் கொக்குகள் உள்ளிட்டவை ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளன.

  2-ம் கட்ட ஆய்வில் மண்டல வனப் பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, மாவட்ட வனப் பாதுகாவலர் எச். பத்மா, உதவி வனப் பாதுகாவலர் (தலைமையிடம்) இரா. காஞ்சனா, தொழில்நுட்ப உதவியாளர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர். 3-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு 2014 ஜனவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai