சுடச்சுட

    

    திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வபிரகாஷ். இவர்,  வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் பேட்டரி கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை இரவு கடையை பூட்டிச் சென்ற இவர், திங்கள்கிழமை காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். கடைக்குள் பணம் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதேபோல அதன் அருகே இருந்த ஒரு கடையிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றிருந்தது தெரியவந்தது.

    பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விரல்ரேகை நிபுணர்களும் வந்து சோதனை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai