சுடச்சுட

  

  அம்பை ஆட்டோ டிரைவர் கொலை: 8 மாதத்திற்கு பிறகு 5 பேர் கைது

  By dn  |   Published on : 25th December 2013 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அம்பாசமுத்திரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 மாதத்திற்கு பிறகு 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

  அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டி அமராவதி தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் முத்துகுமார் (25). ஆட்டோ டிரைவரான இவரை கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி மர்ம நபர்கள் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலையில் தொடர்புடையவர்கள் இதுவரை பிடிபடாமல் இருந்துவந்தனர்.

  இதற்கிடையே, திருநெல்வேலி அருகே சுத்தமல்லியை சேர்ந்த தொழிலாளி பரமசிவன்  (43) கொலை வழக்கில் தொடர்புடைய மூவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில் கடந்த 2009-ஆம் ஆண்டு மதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு ஆதரவாக ஆட்டோ டிரைவர் முத்துகுமார் செயல்பட்டதால் பழிக்குப்பழியாக அவரை கொலை செய்தது தெரியவந்தது.

  இதையடுத்து முத்துகுமார் கொலையில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாட்டைச் சேர்ந்த பேச்சிமுத்து (32), அம்பாசமுத்திரம் அருகே சாட்டுபத்து கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (24), சுத்தமல்லியை சேர்ந்த திரவியராஜ் (27), திருமால் (38), அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தைச் சேர்ந்த சிவபாலன் (27) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai