சுடச்சுட

  

  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் 58 இந்தியன் வங்கி கிளைகள் மூலம் 142 பயனாளிகளுக்கு ரூ. 23.44 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

  இந்தியன் வங்கி வீட்டுக் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் கடன் வழங்குவது குறித்த "கோம்போ' கடன் முகாம் திருநெல்வேலி மண்டலத்தில் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள வங்கி கிளைகளில் நடைபெற்றது.

  இம் முகாமில் 142 பயனாளிகளுக்கு வீட்டுக் கடனாக ரூ. 22.26 கோடியும், வாகனக் கடனாக ரூ. 1.18 கோடியும் கடனுதவி வழங்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு கிளையில் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு வங்கியின் மண்டல மேலாளரும், துணைப் பொதுமேலாளருமான கே. அமுது காசோலை வழங்கினார். திருநெல்வேலி சந்திப்பு, நாகர்கோவில், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் மேலூர் உள்பட 58 கிளைகளில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் முதுநிலை மேலாளர் வி. சங்கரன், கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai