சுடச்சுட

  

  கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியில் கூட்டுறவு விழா மற்றும் உறுப்பினர் சந்திப்பு முகாம் நடைபெற்றது.

  கைத்தறி மற்றும் துணி நூல் துறை வழங்கும் திட்டங்களின் அலுவலர் ஏ.மாரியப்பன் வரவேற்றார். பாளையங்கோட்டை மகாத்மா காந்தி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் அனந்தன் அய்யன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட பொது மேலாளர் இரா.மீராபாய், கைத்தறி மற்றும் நுணி நூல் துறை உதவி இயக்குநர் இரா.தினகரன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சங்க வளாகத்தில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன.

  ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட அலுவலர் என்.சக்திவேல் வாழ்த்திப் பேசினார். பட்டய தணிக்கையாளர் ஆர்.சுப்பிரமணியன், துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.ராஜேந்திரன், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.வெங்கடேசன், திருநெல்வேலி மண்டல இணைப்பதிவாளர் க.கனகசுந்தரம், கைத்தறி ஆய்வாளர் பி.சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  என்.ஜி.ஓ. காலனி: திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனி அலுவலர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, சங்கத் தலைவர் கோ.சுப்பையா தலைமை வகித்தார். வீட்டுவசதி துணைப் பதிவாளர் (திருநெல்வேலி) பா.வளர்மதி, பேராசிரியை சுகிர்தா, கதிரவன், கந்தசாமி ஆகியோர் பேசினர். கூட்டுறவு சார்பதிவாளர் சு.செண்பகம் வரவேற்றார். என்.ஜி.ஓ. காலனி கூட்டுறவு வீட்டுவசதி சங்க துணைத் தலைவர் டி.கே.ராமசாமி, செயலர் ஆ.சைலப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai