சுடச்சுட

  

  கோமாரி நோய் அச்சம்: நெல்லை மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைக்குத் தடை

  By dn  |   Published on : 25th December 2013 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோமாரி நோய் தாக்குதல் அச்சம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைக்கு தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தை திங்கள்கிழமை கடையத்திலும்,  செவ்வாய்க்கிழமை மேலப்பாளையத்திலும், வியாழக்கிழமை பாவூர்சத்திரத்திலும்,  வெள்ளிக்கிழமை முக்கூடலிலும், சனிக்கிழமை ஆலங்குளத்தை அடுத்த ரெட்டியார்பட்டியிலும் கூடுகிறது. இந்தச் சந்தைகளில் திருநெல்வேலி மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளத்திலிருந்தும் வியாபாரிகள் கூடி ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

  இப்போது ஆடு, மாடுகளைத் தாக்கும் கோமாரி நோய் பரவலாக பரவி வருகிறது. நோய்த் தாக்குதல் உள்ள இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் ஆடு, மாடுகளால் நோயின் தாக்குதல் அதிகமாகக்கூடும் என்பதால் ஒரு மாத காலம் அதன் விற்பனைக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இதுகுறித்து ஆலங்குளம் வட்டாட்சியர் ரதி (எ) லெட்சுமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கால்நடைகளுக்கு வேகமாகப் பரவிவரும் கோமாரி நோயைக்  கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிமாநிலங்களிலிருந்து வரும் கால்நடைகளை வராமல்  தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, ரெட்டியார்பட்டியிலும்  கால்நடைகளின் விற்பனையைத் தடை செய்துள்ளோம். இந்தத் தடை ஒரு மாத காலம் அமலில் இருக்கும் என்றார்.

  இதுகுறித்து ரெட்டியார்பட்டி சந்தைக்கு வந்த, கிருஷ்ணபேரியைச் சேர்ந்த ஆடு  வியாபாரி சேர்மன் கூறியதாவது: இந்தத் தடை குறித்து எங்களிடம் முன்கூட்டியே  தகவல் தெரிவிக்கவில்லை. சனிக்கிழமை ஆடு வியாபாரத்துக்காக வந்த எங்களை வியாபாரம் செய்யவிடாமல் போலீஸார் தடுத்துவிட்டனர். முன்கூட்டியே தகவல் அளித்திருந்தால் ஆடுகளை வெளியில் வாங்காமல் இருந்திருப்போம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai