சுடச்சுட

  

  தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி: மாணவி முதலிடம்

  Published on : 25th December 2013 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடுவர்களாக பேராசிரியர்கள் எஸ்.வி.எல்.மைக்கேல், பிரான்சிஸ் சேவியர், வேலம்மாள் ஆகியோர் செயல்பட்டனர்.

  உயர்நிலைப் பள்ளி பிரிவு பேச்சுப் போட்டியில் கருத்தப்பிள்ளையூர் தூய  அந்தோனியார் உயர்நிலைப் பள்ளி மாணவி ம.இசைவாணி முதலிடம் பிடித்தார். பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.மகாலெட்சுமி இரண்டாமிடமும், பேட்டை தூய அந்தோனியார் மேல்நிலைப்  பள்ளி மாணவி ஹை.கலீல் ஜெயிலானி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

  மேல்நிலைப் பள்ளி பிரிவு பேச்சுப் போட்டியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர் அன்டோ வளர் பிரைட்டன் முதலிடமும், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சா.அபிராமி, நல்லம்மாள்புரம் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி மாணவி வே.ராஜசெல்வி என்ற பரமேஸ்வரி ஆகியோர் 2-ஆம் இடமும், பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆ.கெüசல்யா 3-ஆம் இடமும் பிடித்தனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்-மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழும், வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் இம் மாதம் 30-ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

  ஏற்பாடுகளை விழாக் குழு உறுப்பினர்கள் அல்போன்ஸ், லூயிஸ், பாக்கியசெல்வன், லெனாகுமார், கணேசன், புருஷோத்தமன் ஆகியோர் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai