சுடச்சுட

    

    நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை: அடவிநயினார், கருப்பாநதி அணைகள் நீர்மட்டம் உயர்வு

    By dn  |   Published on : 25th December 2013 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக அடவிநயினார், கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி இம்மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) பாபநாசம் அணை 21, பாபநாசம் கீழ்அணை 10, சேர்வலாறு அணை  10, மணிமுத்தாறு அணை 3.4, ராமநதி அணை 2, அடவிநயினார் அணை 19, கருப்பாநதி அணை 23, வடக்குப் பச்சையாறு அணை 28.6, குண்டாறு அணை 16, கொடுமுடியாறு அணை 15, பாளையங்கோட்டை 3, செங்கோட்டை 37, தென்காசி 26, அம்பாசமுத்திரம் 3, சேரன்மகாதேவி 1.2.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் 96 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 108.43 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.50 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 64.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 64.00 அடியாகவும் இருந்தது.

    பாபநாசம் அணைக்கு நொடிக்கு 673 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 202 கனஅடியும், கடனாநதி அணைக்கு 88.57 கனஅடியும், ராமநதி அணைக்கு 30 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையிலிருந்து 600 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 35 கனஅடியும், கடனாநதி அணையிலிருந்து 45 கனஅடியும், ராமநதி அணையிலிருந்து 30 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    நீர்மட்டம் உயர்வு: கருப்பாநதி அணைக்கு நொடிக்கு 104 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு 107 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 57.75 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2.25 அடி உயர்ந்து 116.50 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 27 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது.

    அம்பை பகுதியில் மழை: மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக ஒரு சில இடங்களில் பலத்த  மழை பெய்துவருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், ஆழ்வார்குறிச்சி, கடையம், ரவணசமுத்திரம் பகுதியில் பலத்த மழை பெய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai