சுடச்சுட

  

  பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் கல்லூரி பேராசிரியர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

  திருநெல்வேலி தூய யோவான் கல்லூரியில் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்; கல்லூரியில் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள், மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தப் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

  மூட்டா மண்டலத் தலைவர் எஸ்.நவநீதகிருஷ்ணன், டான்சாக் மண்டலத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மூட்டா தலைவர் த.மனோகர ஜஸ்டஸ் தொடங்கிவைத்தார்.

  மூட்டா துணைத் தலைவர் எம்.நாகராஜன், ஜான்ஸ் கல்லூரி கிளைச் செயலர்  ஆன்ட்ரூஸ், மூட்டா மண்டலச் செயலர் ஆர்.முருகேசன், டான்சாக் மண்டலச் செயலர் மகாராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலர் சொ.முருகேசன், பஸýலுஹாக், சார்லஸ், அசோக், பட்டன், முத்துகிருஷ்ணன், சுப்பிரமணியன், கனகராஜ், மூட்டா பொதுச்செயலர் எஸ்.சுப்பாராஜு உள்பட பலர் கலந்துகொண்டனர். மூட்டா மண்டலப் பொருளாளர் நசிர்அகமது நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai