சுடச்சுட

  

  மாநில முதியோர் தடகளப் போட்டி: கோவை அணி ஒட்டுமொத்த சாம்பியன்

  By dn  |   Published on : 25th December 2013 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் 2 நாள்கள் நடைபெற்ற 32-வது மாநில அளவிலான முதியோர் தடகளப் போட்டியில், கோவை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணி 2-ம் இடம் பெற்றது.

  திருநெல்வேலி முதியோர் தடகளக் கழகம் சார்பில் இப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. போட்டிகளை ஆட்சியர் எம். கருணாகரன் தலைமை வகித்து தொடக்கிவைத்தார்.

  இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 1,350 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

  35 வயது முதல் 95 வயது வரையிலான ஆண், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்பட ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் சேர்த்து மொத்தம் 378 போட்டிகள் நடத்தப்பட்டன.

  இதில் 655 புள்ளிகள் பெற்று கோவை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 639 புள்ளிகளுடன் சென்னை அணி 2-ம் இடமும், 439 புள்ளிகளுடன் கொங்கு அணி 3-ம் இடமும் பிடித்தன.

  ஆண்கள் பிரிவில் 409 புள்ளிகள் பெற்று சென்னை அணி முதலிடம் பெற்றது. 294 புள்ளிகள் பெற்று கோவை அணி 2-ம் இடமும், 213 புள்ளிகள் பெற்று கொங்கு அணி 3-ம் இடமும் பெற்றன. பெண்கள் பிரிவில் 361 புள்ளிகள் பெற்று கோவை அணி முதலிடம் பிடித்தது. 227 புள்ளிகள் பெற்று சென்னை அணி 2-ம் இடமும், 226 புள்ளிகள் பெற்று கொங்கு அணி 3-ம் இடமும் பெற்றன.

  பரிசளிப்பு விழா: பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. முதியோர் விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் எஸ். செல்வன் ராஜதுரை முன்னிலை வகித்தார். சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டிலப் பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ், போட்டிகளில் வென்ற அணிகளுக்கு கோப்பை, கேடயங்களை வழங்கினார்.

  முதியோர் விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சஞ்சய் குணசிங், நீல்விண் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai