Enable Javscript for better performance
மூன்றடைப்பு அருகே மூதாட்டி கொலை: பேரன் கைது- Dinamani

சுடச்சுட

    

    மூன்றடைப்பு அருகே மூதாட்டி கொலை: பேரன் கைது

    By dn  |   Published on : 25th December 2013 03:33 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது பேரனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    மூன்றடைப்பு அருகே உள்ள சூரப்பபுரத்தைச் சேர்ந்த சங்கரன் மனைவி ஆவுடையம்மாள் (80). இவரது மகள் சுசீலா. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன்பின்பு சுசீலாவின் மகனான ரவிசங்கருடன் (37) ஆவுடையம்மாள் வசித்து வந்தார்.

    இந்நிலையில், ஆவுடையம்மாள் வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை துர்நாற்றம் வந்தது. தகவலறிந்ததும் மூன்றடைப்பு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது, உடலில் காயங்களுடன் ஆவுடையம்மாள் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

    சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, அவரது பேரன் ரவிசங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai