Enable Javscript for better performance
ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் பேச்சுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் பேச்சுப் போட்டி

    By dn  |   Published on : 25th December 2013 03:34 AM  |   அ+அ அ-   |    |  

    ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில், திருநெல்வேலி மண்டல அளவிலான பேச்சுப் போட்டி திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    போட்டிக்கு, மாநில மாணவர் அணி துணைச் செயலர் எம்.ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலர் எஸ்.பெருமாள் போட்டியைத் தொடங்கிவைத்தார். மாநில மாணவர் அணிச் செயலர் தி.மு.ராஜேந்திரன், எழுத்தாளர் மதுரா, தேர்தல் பணி துணைச் செயலர் ம.பாக்கியம் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இப் போட்டியில் திருநெல்வேலி, திருநெல்வேலி மாநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் வென்ற 12 மாணவர்-மாணவிகள்  கலந்துகொண்டனர். பி.நாகலிங்கம், புத்தனேரி செல்லப்பா, காசிராஜன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

    இப்போட்டியில் ராஜ்கமல், எம். சிவசங்கரி, ஆர்.சங்கீதலட்சுமி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்ததோடு, சென்னையில் டிச. 22-ஆம் தேதி நடைபெறும் மாநிலப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுதவிர போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    நெசவாளர் அணி திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் அ.சிவானந்தம், துணை அமைப்பாளர் எஸ்.கார்த்திகேயன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மு.சின்னத்துரை, மாநில இலக்கிய அணி துணைச் செயலர் எம்.எஸ்.சுதர்சன், ஆழ்வை ரஞ்சன், மத்தேயு ஜெபசிங், ஜெரால்டு ஹேக்டேர், சின்னக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.ஷாஜி நன்றி கூறினார்.

     

     

     

    x

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai