சுடச்சுட

  

  16 மையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு: 5,541 பேர் எழுதினர்

  By dn  |   Published on : 25th December 2013 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் 16 மையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத் தேர்வை 5,541 பேர் எழுதினர்.

  பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத் தேர்வினை எழுதுகின்றனர்.  இதில் வெற்றிபெறுவோருக்கு பிளஸ்-2 வரை மத்திய அரசால் சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஹலன் புயல் உள்ளிட்ட காரணங்களால் தேர்வு 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

   அதன்படி திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் சாப்டர் மேல்நிலைப் பள்ளி, சாராள்தக்கர் மேல்நிலைப் பள்ளி உள்பட 9  மையங்களிலும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 3 மையங்களிலும், தென்காசி கல்வி மாவட்டத்தில் 4 மையங்களிலும் என மொத்தம் 16 தேர்வுமையங்களில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது.

  இத் தேர்வை எழுத 6 ஆயிரத்து 395 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 5 ஆயிரத்து 541 மட்டுமே பங்கேற்று தேர்வை எழுதினர். தேர்வு 2 வகையாக நடத்தப்பட்டது. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை பொதுஅறிவு, தனித்திறன் கேள்விகள் அடங்கிய முதல்தாளும், முற்பகல் 11.30 முதல் மதியம் 1 மணி வரை அறிவியல் கேள்விகள் அடங்கிய 2-ம் தாள் தேர்வும் நடத்தப்பட்டன. இத் தேர்வையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai