சுடச்சுட

  

  "வாருங்கள் இறைவனைக் காணலாம்' என்ற அமைப்பு சார்பில் இலவச திருமண நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர்.

  இந்த அமைப்பின் சார்பில் 27-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு  அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி வே.கணேசன் தலைமை வகித்தார்.

  ஷிபா  மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஷாபி, இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் டி.ஏ.பிரபாகர், அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை கணக்கு அலுவலர் காசிசங்கரநமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவில், 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டது. மாற்றுத்திறன் படைத்த 112 பேருக்கும், மாற்றுத்திறன் படைத்த சிறுமிகள் 55 பேருக்கும், விதவைகள் மற்றும் வயதான பெண்கள் 100 பேருக்கும் என மொத்தம் 420 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  சரணாலயம் அமைப்பின் நிர்வாகி ஜோமிக்ஸ் அடிகளார், தொழிலாளர் நல அலுவலர் சுடலைராஜ், செல்லப்பா, ஜெயகோபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai