சுடச்சுட

  

  "கிராமப்புற மாணவர்களின் கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம்'

  By திருநெல்வேலி,  |   Published on : 26th December 2013 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிராமப்புற மாணவ, மாணவியரின் கல்வி சுகாதார மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில், பாரத் ஹெரிடேஜ் பவுண்டேஷன் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் வி. நடேசன் தெரிவித்தார்.

  திருநெல்வேலி சங்கீத சபாவில் இவ்வமைப்பின் சார்பில் சுவாமி விவேகானந்தரின்  150-ஆவது ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் ஒருங்கிணைப்பாளர் வி. நடேசன் பேசியது:

  கிராமங்களை காக்கவும், பசுக்களை பாதுகாக்கவும், பயிர்களின் உற்பத்தியைப்  பெருக்கவும் தேவையான பணிகளை பாரத் ஹெரிடேஜ் பவுண்டேசன் செய்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

  திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள ரெட்டியார்பட்டி, மாயமான்குறிச்சி, ஆலடிப்பட்டி ஆகிய கிராமங்களில் பள்ளி மாணவியருக்கு சுகாதார வளாகங்கள் கட்டித்தரப்பட்டுள்ளன. ஆலங்குளம், நாசரேத், சாத்தான்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 கிராமங்களில் உள்ள மாணவ, மாணவியருக்கு இலவசமாக அடிப்படை கணிதம், ஆங்கிலம், கணினிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவைத் தவிர கிராமப்புற பெண்கள், குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு உதவிட பிப்ரவரி மாதம் வரை கணிதம் மற்றும் ஆங்கில பாட வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றார்.

  அறக்கட்டளையின் கொள்கைகள் குறித்து அதன் தலைவர் ஆர். வெங்கடநாராயணன் விளக்கிப் பேசினார். திருநெல்வேலி சாரதா மகளிர் கல்லூரிச் செயலர் சரவணபவ பிரியாம்பா, சங்கீத சபா செயலர் நடேசன் ஆகியோர் விவேகானந்தரின் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறினர்.

  விழாவில், பகவக் கீதை, பக்திப் பாடல்கள் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 360 மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை இயக்குநர் பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள், மாணவர்கள், சங்கீத சபா நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai