சுடச்சுட

  

  கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டி: உபகரணங்கள் அளிப்பு

  By திருநெல்வேலி  |   Published on : 26th December 2013 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்ட கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  தமிழக அரசின் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 106 கிராம ஊராட்சிகளில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப் போட்டிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன், உபகரணங்கள் மற்றும் காசோலைகளை வழங்கிப் பேசினார். மானூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், பாளையங்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் போட்டி நடத்துவதற்கான காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

   நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (கிராம ஊராட்சிகள்) வீரபத்திரன், விளையாட்டு விடுதி மேலாளர் கில்பர்ட் பெஞ்சமின், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா.பிராங்க்பால் ஜெயசீலன், நீச்சல் பயிற்றுநர் பிரேம்குமார், ஊராட்சித் தலைவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தடகள பயிற்றுநர் சத்யகுமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai