சுடச்சுட

  

  சிற்றாறு தனிக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் வலியுறுத்தல்

  By திருநெல்வேலி,  |   Published on : 26th December 2013 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிற்றாறு தனிக்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மானூர் வடக்கு, தெற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஏ.  தமிழ்செல்வன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் பி. அருள்ராஜ் (வடக்கு), பழவூர் ராமச்சந்திரன் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அ. அமீர்கான், சுத்தமல்லி முருகேசன், திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர் நவமணிபாண்டியன், மாவட்ட மகளிரணித் தலைவி தனித்தங்கம், முன்னாள் வட்டாரத் தலைவர் சிவன்சேதுபாண்டியன், அழகை வி. மாரியப்பன், வாகை மனோகர், அருமைநாயகம், அருள்சூசை, கல்லூர் இசக்கிபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மானூர் பெரியகுளம், பள்ளமடைகுளம், கங்கைகொண்டான்குளம் ஆகிய குளங்கள் மூலம் பாசனம் பெறும் வகையில் சிற்றாறு தனிக்கால்வாய் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். நடுக்கல்லூரில் ரயில் நிலையம் அமைத்து அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  பள்ளமடை சிவன்பெருமாள் வரவேற்றார். திருநெல்வேலி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai