சுடச்சுட

    

    சுந்தரனார் பல்கலை.யில் விநாடி-வினா:பாளை கல்லூரி மாணவர்கள் முதலிடம்

    By திருநெல்வேலி  |   Published on : 26th December 2013 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில், பாளையங்கோட்டை கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

    இப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள பாரதி, பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டி நடைபெற்றது. கவிஞர்களின் புகழ்பெற்ற கவிதைகள், வாழ்க்கை வரலாறு, தமிழ் வாழ்க்கையில் அவர்களின் தாக்கம் ஆகியன சார்ந்த கேள்விகள் விநாடி-வினாவில் இடம்பெற்றன.

    இப் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட 31 கல்லூரிகளில் இருந்து தலா 2 பேர் வீதம் 62 பேர் போட்டியில் கலந்துகொண்டனர். எழுத்துத் தேர்வின் முடிவில் 5 கல்லூரிகள் 2-வது நிலையில் நடந்த நேர்முக விநாடி சுற்றுக்குத் தேர்வு பெற்றனர். காரைக்குடி ராமசாமி கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் செ.நாகநாதன் போட்டிகளை வடிவமைத்து வழங்கினார்.

    10 சுற்று போட்டிகளின் முடிவில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்கள் செ.ச.மாலதி, மு.மாரிமுத்து ஆகியோர் முதல்பரிசாக ரூ.2 ஆயிரம் பெற்றனர். திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவிகள் த.பேபி அமங்கலி, சா.உச்சிமாகாளி ஆகியோர் 2-ம் பரிசாக ரூ.1,500 பெற்றனர். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆ.சிதம்பரம், த.சீதாலட்சுமி ஆகியோர் 3-ம் பரிசு பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரிசுகளை துணைவேந்தர் ஆ.கு.குமரகுரு வழங்கிப் பாராட்டினார். தமிழியல் துறைத் தலைவர் அ.ராமசாமி, பல்கலைக்கழகப் பதிவாளர் தி.தமிழ்ச்செல்வம், ஆட்சிக்குழு உறுப்பினர் சு.அழகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai