சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் சைவ சித்தாந்தப் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

    பாளையங்கோட்டை சைவ சபை சார்பில், சைவ சித்தாந்தப் பயிற்சி நிறைவு விழா மற்றும் 2014-15ஆம் ஆண்டு புதிய தொகுப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் வள்ளிநாயகம் தலைமை வகித்தார். மைய நிறுவனர் சுந்தரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய அமைப்பாளர் பெ. கணபதி வரவேற்றார். ஓய்வுபெற்ற கூட்டுறவுத் துறை உதவி இயக்குநர் தீர்த்தாரப்பன் மகேஷ்வர பூஜை நடத்தினார். சித்தாந்தப் பயிற்சி முதல் நிலைத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த சங்கர், பாக்கியலட்சுமி, மீனாம்பிகை ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai