Enable Javscript for better performance
தீப்பெட்டி மூட்டைகள்உரசியதில் தீ விபத்து: இளைஞர் கருகி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தீப்பெட்டி மூட்டைகள்உரசியதில் தீ விபத்து: இளைஞர் கருகி சாவு

    By திருநெல்வேலி,  |   Published on : 26th December 2013 03:51 AM  |   அ+அ அ-   |    |  

    கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில், தீக்குச்சி மூட்டைகளை வேனில் ஏற்றும்போது, தீக்குச்சிகள் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் புதன்கிழமை இரவு இறந்தார்.

     கோவில்பட்டி அருகே கரிசல்பட்டியில் ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இங்கு தயாரான தீக்குச்சி மூட்டைகளை தொழிலாளர்கள் வேனில் கொண்டு செல்வதற்காக ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

     இப்பணியில் முடுக்காலம்குளத்தைச் சேர்ந்த பால் மகன் குப்புசாமி (31), சிவந்திபட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சோலையப்பன் மகன் ஆத்தியப்பன் (30) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

     அப்போது எதிர்பாராத விதமாக தீக்குச்சிகள் உரசியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயில் சிக்கி பலத்த காயமடைந்த குப்புசாமி, ஆத்தியப்பன் ஆகியோர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

     இதில், ஆத்தியப்பன் புதன்கிழமை இரவு இறந்தார். இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai