சுடச்சுட

  

  தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு: கல்லணை பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

  By திருநெல்வேலி  |   Published on : 26th December 2013 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில், திருநெல்வேலி நகராட்சி மகளிர் (கல்லணை) மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

  8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்-மாணவிகளுக்கு மத்திய அரசு மூலம், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகிóன்றன. அதன்படி இந்தத் தேர்வில் திருநெல்வேலி நகராட்சி மகளிர் (கல்லணை) மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இப் பள்ளி மாணவி என்.சுபாஷினி 120 மதிப்பெண்கள் பெற்று திருநெல்வேலி மாவட்டத்தில் 3-ம் இடத்தைப் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியைகள் மு.ராஜேஸ்வரி, ஆ.காளியம்மாள், மா.குமார், ஜெயராஜ் ஆகியோருக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சு. லீலாவதி வாழ்த்து தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai