சுடச்சுட

  

  தேர்தலில் வாய்ப்பு கோரி கனிமொழி எம்.பி-யிடம் விஸ்வகர்ம இயக்கம் மனு

  By திருநெல்வேலி,  |   Published on : 26th December 2013 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலில் விஸ்வகர்ம சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விஸ்வகர்ம விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனிமொவி எம்.பி-யைச் சந்தித்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. ராஜ்குமார் அளித்த மனு விவரம்:

  மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, விஸ்வகர்ம சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதியிடம் விஸ்வகர்மக விடுதலை இயக்கத்தின் கோரிக்கையை விளக்கி வாய்ப்புகளைப் பெற்றுத்தருமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மனு அளித்தபோது, இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ். ரவி, மாநில கொள்கை பரப்புச் செயலர் எம். சண்முகவேல் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai