சுடச்சுட

  

  நெல்லையப்பர் கோயிலில் பிடிபட்ட 11 குரங்குகள்

  By திருநெல்வேலி  |   Published on : 26th December 2013 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களுக்குத் தொந்தரவு அளித்து வந்த 11 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து மணிமுத்தாறு வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை விட்டனர்.

  நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களை குரங்குகள் தொந்தரவு செய்து வந்தன.

  இதையடுத்து கோயில் வளாகத்தில் சுற்றித் திரியும் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுóக்கப்பட்டது. மாவட்ட வனஅலுவலர் எச். பத்மா உத்தரவின்பேரில், கோயில் வளாகத்தில் குரங்கினைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. 

  திருநெல்வேலி வனச்சரகர் தார்சியுஸ், வனவர் பால்ராஜ், வனக்காப்பாளர் மதியழகன் அடங்கிய குழுவினர் குரங்கு பிடிக்கும் பணியினை மேற்கொண்டனர். கடந்த 3 தினங்களில் பிடிக்கப்பட்ட 11 குரங்குகளை மணிமுத்தாறு வனப்பகுதியில் கொண்டு செவ்வாய்க்கிழமை வனத்துறையினர் விட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai