சுடச்சுட

  

  நெல்லை மாவட்ட அளவில் ஜன. 5-ல் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள்

  By திருநெல்வேலி,  |   Published on : 26th December 2013 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருநெல்வேலி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியன ஜன. 5-ஆம் தேதி நெல்லையப்பர் கோயிலில் நடைபெறவுள்ளன.

  இதுதொடர்பாக அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் ந. யக்ஞனநாராயணன் கூறியது:

  இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில்களில் மாவட்ட அளவில் மார்கழி மாத திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

  இதன்படி, திருநெல்வேலி மாவட்ட அளவிலான போட்டிகள் நெல்லையப்பர் கோயிலில் ஜன. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

  ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

  5-ஆம் வகுப்பு வரை உள்ளோருக்கு திருப்பாவை, திருவெம்பாவையில் ஏதாவது ஒன்றில் முதல் 5 பாசுரங்களை ஒப்பிக்க வேண்டும். ஆண்டாளும், இயற்கையும் அல்லது மார்கழியும், மாணிக்கவாசகரும் எனும் தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.

  8-ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் 10 பாசுரங்களை ஒப்பிக்க வேண்டும். அவதாரங்கள் அல்லது உள்ளம் உருக்கும் திருவாசகம் எனும் தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 20 பாசுரங்களை ஒப்பிக்க வேண்டும். பூஜை முறைகள் அல்லது சிவனது தோற்ற வர்ணனை எனும் தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.

  ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு ரூ. 3 ஆயிரம், 2-ஆவது பரிசு ரூ. 2 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ. 1000 ரொக்கமாக வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பள்ளியில் இருந்து அதிகபட்சமாக 2 மாணவர்கள் அல்லது 2 மாணவிகள் பங்கேற்கலாம்.  

  போட்டிகள் ஜன. 5-ஆம் தேதி, காலை 10 மணிக்குத் தொடங்கும். கூடுதல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை நேரிலோ, 0462-2339910 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai