சுடச்சுட

  

  பாரதியார் பிறந்த தின போட்டி: மாணவர்களுக்குப் பரிசளிப்பு

  By திருநெல்வேலி,  |   Published on : 26th December 2013 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டையில் நடைபெற்ற வாசகர் வட்ட விழாவில், பாரதியார் பிறந்த தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

  மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் மாதாந்திர இலக்கிய நூல் அறிமுகக் கூட்டம், மகாகவி பிறந்த தின விழா, தேசிய நுகர்வோர் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

  விழாவுக்கு, வாசகர் வட்டத் தலைவர் அ. மரியசூசை தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் க. மந்திரம் முன்னிலை வகித்தார். பாரதியின் தமிழ்த் தொண்டு, நுகர்வோரின் உரிமை, கடமை என்ற தலைப்புகளில் நடைபெற்ற இக்கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெட்காட் கல்வி இயக்குநரகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி உதவி ஆணையர் அ. பெருமாள், மாணவ,  மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார்.

  சிந்தனை முற்றம் எனும் விழிப்புணர்வு விவாத நிகழ்ச்சியில், பெட்காட் அமைப்பின் மாநில துணைத் தலைவர் க. வெங்கடாசலம், வாசகர் வட்டச் செயலர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் நுகர்வோரின் உரிமை, கடமை, சட்டங்கள், வழக்குகள், தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து பேசினர். பறக்கும்படை வட்டாட்சியர் சொர்ணராஜ் வாழ்த்தினார். விநாடி-வினா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

  பாரதியின் பாத்திரங்கள் என்ற தலைப்பில் கவிஞர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்கள் ராஜேந்திரன், சிவசங்கரன், சிற்பி பாமா, தச்சை மணி, கணபதி, சுப்பிரமணியன், தேவராஜ் பேசினர். இசக்கிராஜா, பாரதி பாடல் பாடினார். மாவட்ட நூலகர் அ. முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai