சுடச்சுட

    

    பால் கொள்முதல் விலை உயர்வு: முதல்வருக்கு நன்றி

    By திருநெல்வேலி,  |   Published on : 26th December 2013 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பால் கொள்முதல் விலையை உயர்த்தியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பொது மேலாளர் தெ. பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கை:

    ஆவின் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில்,  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தினமும் 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 அதிகரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    தமிழக முதல்வருக்கு, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சார்பாக, ஒன்றியத் தலைவர் எஸ். ரமேஷ் நன்றி தெரிவித்துள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai