சுடச்சுட

  

  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனத்தின் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் மண்டலம் சார்பில், வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனை முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

  போராட்டத்துக்கு திருநெல்வேலி மண்டலத் தலைவர் பி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நாகர்கோவில் மண்டலச் செயலர் என். அய்யாதுரை தொடங்கி வைத்தார். ஜெ. ஜெயபால், ஏ. ராஜாஜி, டி. சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  1-4-2003-க்கு பின், பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.  10 சதவிகித அகவிலைப்படி உயர்வை, நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள ஓய்வு கால சேமநல நிதியை தொடர்ந்து வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  ஓய்வுபெற்றோர் சங்கத் தலைவர் தங்கப்பன், கே. சந்தானம், என். கல்யாணசுந்தரம், என். ஆயிரத்தான், வி. பிரம்மநாயகம், ஈ. உத்ரம், எஸ். சண்முகம், கே. விஜயகுமார், எஸ். சந்தனம், ஏ. செண்பகம் உள்ளிட்டோர் பேசினர். மாநிலச் செயல் தலைவர் டி. திருமலைச்சாமி நிறைவுரையாற்றினார். பி.எச். ரஞ்சன்சிங் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai