சுடச்சுட

    

    ஸ்டாலின் வருகை: நெல்லை மாநகர திமுக மாணவரணி ஆலோசனை

    By திருநெல்வேலி,  |   Published on : 26th December 2013 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை வரவேற்பது தொடர்பாக, திமுக மாணவரணி மாநகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாநகர மாணவரணி அமைப்பாளர் வ. பால்மாயாண்டி என்ற அண்ணாத்துரை தலைமை வகித்தார்.

    மாநகர திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பா. அருண்குமார் ஆகியோர் பேசினர்.

    டிச. 27, 28-ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தரும் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, மாணவரணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai