சுடச்சுட

  

  உவரி அருகே கடலில் தவறி விழுந்த பள்ளி மாணவி சாவு

  By வள்ளியூர்,  |   Published on : 27th December 2013 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உவரி அருகே கூட்டப்பனையில் கடலுக்குள் படகில் சென்ற பள்ளி மாணவி தவறி விழுந்து இறந்தார்.

  உவரி அருகே உள்ள கூட்டப்பனையைச் சேர்ந்தவர் சுரேஷ். மீனவர். இவருக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முடித்த இவர்கள் குடும்பத்தோடு,  சுரேஷின் தம்பி சுரபோஸ் என்பவரது மீன்பிடிப் படகில் வியாழக்கிழமை கடலுக்குள் பொழுதுபோக்காகச் சென்றனர்.

  சிறிது நேரம் கழித்து படகு கரைக்கு வந்து சேர்ந்தது. அப்போது படகில் இருந்த  சுரேஷின் கடைசி மகள் சகாயஜெனிதா (12) கடலுக்குள் தவறி விழுந்தாராம்.

  அவர்  படகுக்குள் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தார். சகாய ஜெனிதா 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

  தகவலறிந்த கடலோரக் காவல்படை போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai