சுடச்சுட

  

  வி.மு.சத்திரத்தில் உள்ள பி.எம். சங்கரசுப்பையா நினைவு தொழில்பயிற்சி நிலையத்தில் 25-ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

   விழாவுக்கு, தாளாளர் மேகலா முத்துசாமி தலைமை வகித்தார். முதல்வர் ஊ. இசக்கிமுத்து வரவேற்றார். மருத்துவர்கள் கார்த்திகேயன், ரதிதேவி, அர்ஜுன் ஹரிணி ஆகியோர் பேசினர். கைப்பந்து, கபடி, உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ரிலே ஓட்டம், ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக புள்ளிகள் வென்ற பொருத்துநர் தொழிற்பிரிவு சாம்பியன் கோப்பையை வென்றது. 

   போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மகராசி நன்றி கூறினார். ஏற்பாடுகளை அருளானந்து, சுபராஜ், சுந்தர், உமா, அமராவதி உள்பட பலர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai